Friday, 26 December 2025

மேகம்

மேகம்

 

மெதுவாகத் தொட்டுச் செல்லும் – இந்த

வெண்பஞ்சு மேகம்  - என்னை

எங்கேயோ கூட்டிச் செல்லுதே  - மனம்

இலேசாகி விண்ணில் செல்லுதே.

 

மேகமெனும் வானமகள் ஆடை

எனையும் போர்த்திக் கொள்ளுதே.

குளிர் சேர்த்துச் செல்லுதே.

தளிர் உடல் சிலிர்த்துத் துள்ளுதே.

 

ஓடிவரும் மேகம் என்மேல்

வியர்வை சிந்துதா?

சிந்தும் அந்த வியர்வை - எனக்கு

குளிரைத் தந்ததா?.


No comments:

Post a Comment