மேகம்
மெதுவாகத்
தொட்டுச் செல்லும் – இந்த
வெண்பஞ்சு
மேகம் - என்னை
எங்கேயோ கூட்டிச்
செல்லுதே - மனம்
இலேசாகி விண்ணில்
செல்லுதே.
மேகமெனும் வானமகள்
ஆடை
எனையும் போர்த்திக்
கொள்ளுதே.
குளிர் சேர்த்துச்
செல்லுதே.
தளிர் உடல் சிலிர்த்துத்
துள்ளுதே.
ஓடிவரும் மேகம் என்மேல்
வியர்வை சிந்துதா?
சிந்தும் அந்த வியர்வை - எனக்கு
குளிரைத் தந்ததா?.